இந்தியா பாக்., பேச்சுவார்த்தை துவக்கம்
இந்தியா பாக்., பேச்சுவார்த்தை துவக்கம்
இந்தியா பாக்., பேச்சுவார்த்தை துவக்கம்
ADDED : ஜூலை 27, 2011 11:30 AM
புதுடில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டில்லியில் துவங்கியது.
டில்லி வந்துள்ள பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் மற்றும் மத்திய அமைச்சர் கிருஷ்ணா ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா விரும்புவதாக தெரிவித்தார். இந்தியாவுடன் வெளிப்படையான, முன்னேற்றத்துடன் கூடிய தொடர்பை ஏற்படுத்துவதற்காக தான் இங்கு வந்துள்ளதாக ரப்பானி கூறினார்.