ADDED : ஜூலை 24, 2011 12:14 AM
புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் ஜேசிஐ., சார்பில் கலாசார கலை நிகழ்ச்சி கடற்கரை காந்தி திடலில் நேற்று நடந்தது.
ஜேசிஐ., தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். சுற்றுலா துறை இயக்குனர் சிவக்குமார், ஜேசிஐ., 16ம் மண்டலத் தலைவர் அல்பேஷ் பத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். முன்னாள் மண்டலத் தலைவர் ராஜாராம் அறிமுக உரையாற்றினார். முன்னாள் தேசியத் தலைவர் கோவிந்தராஜ், கலைக்குழுவினை அறிமுகப்படுத்தினார். பிரான்ஸ் நாட்டின் பாலி திவானி குழுவினரின் கலாசார கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. அசோக் நன்றி கூறினார்.