/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அகில இந்திய அளவில் நவ., 15ல் ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்அகில இந்திய அளவில் நவ., 15ல் ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
அகில இந்திய அளவில் நவ., 15ல் ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
அகில இந்திய அளவில் நவ., 15ல் ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
அகில இந்திய அளவில் நவ., 15ல் ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
ADDED : செப் 30, 2011 01:43 AM
விழுப்புரம் : கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 15ல், அகில இந்திய ரயில்வே லோகோ தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
ஆறாவது ஊதிய கமிஷன் பரிந்துரையில், லோகோ பைலட்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்குவதால் பதவி உயர்வில் சிக்கல் ஏற்படும். உயர்வான கிரேடு பே வழங்க வேண்டும். அனைவருக்கும் வழங்குவது போல், ஓடும் தொழிலாளர்களுக்கும் மூன்று மடங்கு, 'ரன்னிங் அலவன்ஸ்' வழங்க வேண்டும். சென்னை, மும்பை, கோல்கட்டா உட்பட பல இடங்களில் உள்ள இ.எம்.யூ., (எலக்ட்ரிக்கல் மல்ட்டிபிள் யூனிட்), டி.இ.எம்.யூ., (டீசல், எலக்ட்ரிக்கல் மல்ட்டிபிள் யூனிட்), எம்.இ.எம்.யூ., (மெயின் லைன் மல்ட்டிபிள் யூனிட்) ரயில்களில் ஒரு டிரைவர் (மோட்டார் மேன்) மட்டுமே பணியில் உள்ளார். பாதுகாப்பு கருதி மோட்டார் மேன்களுக்கு உதவி லோகோ பைலட் நியமிக்க வேண்டும். லோகோ பைலட்களின் வேலையை, ஆறு மணி நேரமாக மாற்ற வேண்டும். ஓடும் தொழிலாளர்களுக்கு மணி நேர கணக்கில் ஓய்வு வழங்குவதை தவிர்த்து, வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும். இவை உட்பட, பல கோரிக்கைகளை அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் சங்கத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். கடந்த, 1980ல், கிழக்கு ரயில்வேயில் உள்ள ஹவுரா பகுதியில் இ.எம்.யூ., (எலக்ட்ரிக்கல் மல்ட்டிபிள் யூனிட்) ரயிலில் பணியில் இருந்த டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, 'டிஎம்எச் சுவிட்ச்' மீது விழுந்தார். இதனால் ரயில் நிற்காமல் சென்று விபத்து ஏற்பட்டது. யூனிட் டிரைவர்களுக்கு உதவி பைலட் நியமிக்க அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் கனிகான் சவுத்திரி, அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். உதவியாளர் நியமித்து சில மாதங்கள் பணி புரிந்தனர். பின், ஆட்கள் குறைப்பு என கூறி அந்த பதவியை எடுத்து விட்டனர். அதன் பிறகும் பல விபத்துகள் நடந்துள்ளன. உதவி லோகோ பைலட் நியமிக்க ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பல காலகட்டங்களில் அறிவுரை வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, இந்திய அளவில் அனைத்து மண்டல ரயில்வே அலுவலங்கள் முன் இச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும் நவ., 15ல், அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.