/உள்ளூர் செய்திகள்/தேனி/வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைதுவேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : செப் 30, 2011 01:30 AM
தேனி : தேனியில் கம்பம் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருபவர் சீனிவாசன்.
இவரது ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிட வரும், போடி விசுவாசபுரத்தை சேர்ந்த நாககிருஷ்ணன் (45) என்பவர், தன்னால் ஆசிரியர் வேலை வாங்கித்தர முடியும் என சீனிவாசனிடம் கூறியுள்ளார். சீனிவாசன் இதனை நம்பி தனது மனைவி ஜெயந்திக்கு வேலை வாங்கித்தருமாறு 1.35 லட்சம் கொடுத்துள்ளார். இதே போல் மற்றொரு பெண்ணும் கொடுத்துள்ளார். நாககிருஷ்ணன் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி அரசு உத்தரவு தயாரித்து இவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த உத்தரவு போலியானது செல்லாது என கல்வித்துறை அதிகாரிகள் கூறி விட்டனர். தங்களை மோசடி செய்து விட்டதாக ஜெயந்தி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் நாககிருஷ்ணனை கைது செய்தனர்.