புது வீட்டில் குடியேறினார் சச்சின்
புது வீட்டில் குடியேறினார் சச்சின்
புது வீட்டில் குடியேறினார் சச்சின்
ADDED : செப் 28, 2011 03:37 PM
மும்பை: புதிய வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நிஜமான சந்தோஷத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தற்போது உள்ளார்.
மும்பையின் பாந்ரா மேற்கு பகுதியில் சச்சின் தற்போது குடியிருந்து வரும் லா மெர் ஹவுசிங் சொசைட்டி வீடு, விளையாட்டு கோட்டாவில் அவருக்கு வழங்கப்பட்டதாகும். தற்போது பாந்ரா புறநகர் பகுதியில் உள்ள பெரி கிராஸ் ரோடில் சுமார் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சச்சின் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்டி குடியேறவேண்டும் என்ற ஆவல் இருக்கும். தனக்கும் அது போன்றதொரு ஆசை இருந்ததாக தெரிவித்தார். வீட்டிற்கான கிரக சாந்தி மற்றும் வாஸ்து பூஜைகள் கடந்த ஜூன் மாதம் நடந்ததாகவும், தொடர்ந்து போட்டிகள் இருந்ததால் அதன்பின் தன்னால் இவ்வீட்டிற்கு வரஇயலவில்லை என்றும் சச்சின் தெரிவித்தார். தான் குடியிருந்த வீட்டில் மற்றொரு விளையாட்டு வீரருக்கு இடம் கிடைக்கும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு சுமார் ரூ. 39 கோடிக்கு இந்த பங்களாவை சச்சின் வாங்கி புதுப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.