Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மோகனூர் ஒன்றிய, டவுன் பஞ்.,ல் வேட்புமனு தாக்கல்

மோகனூர் ஒன்றிய, டவுன் பஞ்.,ல் வேட்புமனு தாக்கல்

மோகனூர் ஒன்றிய, டவுன் பஞ்.,ல் வேட்புமனு தாக்கல்

மோகனூர் ஒன்றிய, டவுன் பஞ்.,ல் வேட்புமனு தாக்கல்

ADDED : செப் 27, 2011 12:30 AM


Google News

மோகனூர்: மோகனூர் டவுன் பஞ்சாயத்து சேர்மன், கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க,. தி.மு.க., தே.மு.தி.க., காங்., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது மோகனூர் யூனியன் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



அதன்படி, 1வது வார்டு ராமநாதன், 2வது வார்டு முத்துசாமி, 3வது வார்டு மதியழகன், 4வது வார்டு மல்லிகா, 5வது வார்டு சரளா, 6வது வார்டு நித்யா, 7வது வார்டு சந்திரமோகன், 8வது வார்டு வளர்மதி, 9வது வார்டு குணசேகரன், 10வது வார்டு ஏலுமலை, 11வது வார்டு மலர்விழி, 12வது வார்டு ராஜேந்திரன், 13வது வார்டு தங்கவேல், 14வது வார்டு விஜயசேகர், 15வது வார்டு தங்கராசு ஆகியோர் கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.



உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள், நேற்று அந்தந்த பகுதி தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என, கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து, மோகனூர் யூனியனில் கவுன்சிலர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், 15 பேரும், நேற்று யூனியன் அலுவலகத்தில், அந்தந்த பகுதி தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.



அதேபோல், மோகனூர் டவுன் பஞ்சாயத்து அ.தி.மு.க., சேர்மன் வேட்பாளராக லட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். 1வது வார்டு தனலட்சுமி, 2வது வார்டு முன்னாள் துணைத்தலைவர் ஆசைத்தம்பி மனைவி ராணி, 3வது வார்டு உஷா, 4வது வார்டு கார்த்திகேயன், 5வது வார்டு தனலட்சுமி, 6வது வார்டு முன்னாள் கவுன்சிலர் குமரேசன், 7வது வார்டு செல்வி, 8வது வார்டு ராம்குமார், 9வது வார்டு நகரச் செயலாளர் பாலு, 10வது வார்டு ஜெகதீசன், 11வது வார்டு முன்னாள் கவுன்சிலர் முருகேசன், 12வது வார்டு ரேவதி, 13வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பாக்கியம், 14வது வார்டு வசந்தி, 15வது வார்டு தனகோடி ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, நகரச் செயலாளர் பாலு, மாவட்ட வக்கீல் அணி துணைச் செயலாளர் தங்கமுத்து, முன்னாள் துணைத்தலைவர் ஆசைத்தம்பி, நகர பொருளாளர் தாவீது, நகர, கிளை நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us