/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கைசேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : செப் 22, 2011 02:33 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பூங்காவில் வைக்கப்பட்டுள்ள
விலங்குகளின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது, சம்மந்தப்பட்ட அலுவலர்கள்
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,
திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ளது.
அலுவலகத்தின் நுழைவு வாயிலில்
பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்டம் மற்றும் சிறுவர்கள் விளையாடும்
வகையிலான சீசா, ஊஞ்சல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. தவிர, பூங்காவின்
ஆங்காங்கே டைனோசர், யானை, மயில் போன்ற வன விலங்குகளின் சிமெண்ட் சிலைகள்
அழகுக்காக வைக்கப்பட்டுள்ளன.வார நாள் மற்றும் விடுமுறை தினங்களில், மக்கள்
பூங்காவை பார்வையிடுவர். குறிப்பாக விடுமுறை தினத்தில் பலர்
குடும்பத்தினருடன், பூங்காவிற்கு வருகின்றனர். விஷமிகள் சிலர்,
பூங்காவினுள் அழகுக்காக வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் பொம்மைகளை
சேதப்படுத்துகின்றனர்.அதனால் பூங்கா பொலிவிழந்து வருகிறது. இதை பூங்கா
பராமரிப்பு செய்யும் துøயினர் கவனத்தில் கொண்டு, பூங்காவின் அழகை
சிதைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.