உலக குத்துச்சண்டை : இந்திய அணி அறிவிப்பு
உலக குத்துச்சண்டை : இந்திய அணி அறிவிப்பு
உலக குத்துச்சண்டை : இந்திய அணி அறிவிப்பு

புதுடில்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடருக்கான, பத்து பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அஜர்பெய்ஜானில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் (செப்.20-அக்.10) நடக்கவுள்ளது. இத்தொடருக்கான வீரர்களை, இந்திய குத்துசண்டை கூட்டமைப்பு (ஐ.பி.எப்.,) நேற்று அறிவித்தது.
இதில் 49 கி.கி., எடைப்பிரிவில் இளம் வீரர் தேவேந்திரோ சிங் (20 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பிரிவில் விளையாடும் அமன்தீப் சிங், நானோ சிங் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. பீஜிங் ஒலிம்பிக் வெண்கல நாயகன் விஜேந்தர் சிங் (75 கி.கி.,), தினேஷ் குமார் (81 கி.கி.,), அகில் குமார் (56 கி.கி.,) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விபரம்: தேவேந்திரோ சிங் (49 கி.கி.,), சுரன்ஜாய் சிங் (52 கி.கி.,), அகில் குமார் (56 கி.கி.,), ஜெய் பகவான் (60 கி.கி.,), மனோஜ் குமார் (64 கி.கி.,), விகாஸ் கிரிஷன் (69 கி.கி.,), விஜேந்தர் சிங் (75 கி.கி.,), தினேஷ் குமார் (81 கி.கி.,), மன்பிரீத் சிங் (91 கி.கி.,), பரம்ஜீத் சமோதா (+91 கி.கி.,).