Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேயிலைக்கு ரூ.2 மானியம்: விவசாயிகள் "குஷி': நீலகிரியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தேயிலைக்கு ரூ.2 மானியம்: விவசாயிகள் "குஷி': நீலகிரியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தேயிலைக்கு ரூ.2 மானியம்: விவசாயிகள் "குஷி': நீலகிரியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தேயிலைக்கு ரூ.2 மானியம்: விவசாயிகள் "குஷி': நீலகிரியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ADDED : ஆக 01, 2011 11:16 PM


Google News
Latest Tamil News

மஞ்சூர்: கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு பசுந்தேயிலை கிலோவுக்கு கூடுதலாக இரண்டு ரூபாய் மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், தேயிலை விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



நீலகிரி மாவட்டத்தில் எடக்காடு, கரும்பாலம், மேற்குநாடு, மகாலிங்கம், மஞ்சூர், இத்தலார், கைகாட்டி, கிண்ணக்கொரை, பிக்கட்டி, எப்பநாடு, பந்தலூர், சாலீஸ்பரி, பிராண்டியர், பிதர்காடு, கட்டபெட்டு உள்ளிட்ட 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன; 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர்.

தங்களது தேயிலைத் தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக தேயிலைக்கு ஏற்பட்ட கடுமையான விலை வீழ்ச்சி காரணமாக, நீலகிரி தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தேயிலை கிலோவுக்கு அதிகபட்சம் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை கிடைத்து வருகிறது. இதனால், தேயிலைத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த மாதம் 26ம் தேதி, நீலகிரி தேயிலை விவசாயிகளின் பிரதிநிதிகள், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் தலைமையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, ஜூன் முதல் டிசம்பர் வரை பசுந்தேயிலை கிலோவுக்கு 2 ரூபாய் கூடுதலாக வழங்க முதல்வர் நேற்று உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் ஜூன் மாதத்துக்கான விலை நிர்ணயம் நேற்று குன்னூர் இன்கோ சர்வ் வாயிலாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, எடக்காடு 8.60 ரூபாய், கரும்பாலம் 8, மேற்கு நாடு 7.60, மகாலிங்கம் 8.10, மஞ்சூர் 8.60, இத்தலார் 7.60, கைகாட்டி 8.60, கிண்ணக்கொரை 8.10, பிக்கட்டி 8.60, எப்பநாடு 7.60, பந்தலூர் 8.60, சாலீஸ்பரி 9.00 , பிராண்டியர் 8.60, பிதர்காடு 8.60 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் மட்டும் பசுந்தேயிலைக்கு வாராந்தர விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கூடுதலாக 2 ரூபாய் அறிவித்ததற்காக, நீலகிரி தேயிலை விவசாயிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us