Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பேட்டை கோடீஸ்வரன் நகரில் போஸ்ட் ஆபீஸ் அமைக்க கோரிக்கை

பேட்டை கோடீஸ்வரன் நகரில் போஸ்ட் ஆபீஸ் அமைக்க கோரிக்கை

பேட்டை கோடீஸ்வரன் நகரில் போஸ்ட் ஆபீஸ் அமைக்க கோரிக்கை

பேட்டை கோடீஸ்வரன் நகரில் போஸ்ட் ஆபீஸ் அமைக்க கோரிக்கை

ADDED : ஜூலை 28, 2011 01:51 AM


Google News

திருநெல்வேலி : பேட்டை கோடீஸ்வரன் நகரில் போஸ்ட் ஆபீஸ் அமைக்க தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேட்டை அருகே கோடீஸ்வரன் நகரில் சுமார் 500 வீடுகள் உள்ளன.

இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை குறைந்த செலவில் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.இக் கடிதங்களை அனுப்புவதற்காக பேட்டை அல்லது டவுனில் உள்ள போஸ்ட் ஆபீசிற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதோடு, பணம் மற்றும் நேரம் விரயமாகி வருகிறது.



இது குறித்து கோடகன்கால்வாய் தலைவர் துரைராஜ் கூறியதாவது;பேட்டை, கோடீஸ்வரன் நகரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உறவினர்களுக்கு கடிதம் அனுப்ப டவுன் அல்லது பேட்டை போஸ்ட் ஆபீசிற்கு செல்ல வேண்டியுள்ளதால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தபால் துறை அதிகாரிகள் பேட்டை கோடீஸ்வரன் பகுதியில் போஸ்ட் ஆபீஸ் அல்லது போஸ்ட் பாக்ஸ் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கோடீஸ்வரன் நகரில் போஸ்ட் ஆபீஸ் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us