காஷ்மீர் விவகார மாநாடுசிதம்பரம் கருத்து
காஷ்மீர் விவகார மாநாடுசிதம்பரம் கருத்து
காஷ்மீர் விவகார மாநாடுசிதம்பரம் கருத்து
ADDED : ஜூலை 26, 2011 11:49 PM
புதுடில்லி:''காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக பேச அமெரிக்க எம்.பி.,க்களுக்கு, பாகிஸ்தான்
உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து பணம் பெற்று கொடுக்க முயன்ற, குலாம்
நபி பய் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இந்தியப் பார்வையாளர் திலீப் பங்கேற்றது
பெரிய விஷயமல்ல,'' என, மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.காஷ்மீரைச் சேர்ந்தவர் குலாம் நபி பய், 62; 'காஷ்மீர் - அமெரிக்கன்
கவுன்சில்' என்ற பெயரில், காஷ்மீர் விடுதலைக்கான இயக்கத்தை வாஷிங்டனில்
நடத்தி வருகிறார்.காஷ்மீர் விடுதலை குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்து, அதற்கு அமெரிக்க
எம்.பி.,க்களை அழைத்து, காஷ்மீருக்கு ஆதரவாக பேச வைப்பதற்காக, பாகிஸ்தான்
உளவு அமைப்பு இவருக்கு, 18 கோடி ரூபாயளவுக்கு நிதி உதவி செய்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து கொண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து
செயல்பட்டதற்காகவும், எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்க முயன்றதற்காகவும்,
இவரை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப்.பி.ஐ., கடந்த வாரம் கைது செய்தது.குலாம் நபி பய் சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் ஏற்பாடு செய்திருந்த
மாநாட்டில், காஷ்மீருக்கான மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட கருத்து
கேட்புக் குழுவின் தலைவர் திலீப் படோங்கர் கலந்து கொண்டார். இந்த பிரச்னையை
எதிர்க்கட்சியினர் கிளப்பி வருகின்றனர்.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் குறிப்பிடுகையில், 'குலாம்
நபி பய் அமெரிக்காவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில், ஒரு பத்திரிகையாளர்
என்ற முறையில் திலீப் கலந்து கொண்டார். காஷ்மீர் மக்களின் கருத்து கேட்புக்
குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு, குலாம் நபியுடன் அவர் எந்த
தொடர்பும் வைத்திருக்கவில்லை.எனவே, அவர் அமெரிக்க கூட்டத்தில் எப்போதோ கலந்து கொண்டதை பெரிதுபடுத்த
வேண்டியதில்லை. குலாம் நபி பய் போல காஷ்மீர் விடுதலைக்காக ஐ.எஸ்.ஐ.,யிடம்
நிதியுதவி பெறுபவர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவர்களை பற்றி எனக்கு
தெரியாது' என்றார்.குலாம் நபி பய் ஏற்பாடு செய்த அமெரிக்க கூட்டத்தில் திலீப் கலந்து கொண்டது
குறித்து மத்திய அரசு தீர விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு
கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தான், காஷ்மீர் மக்கள் குறை கேட்கும்
குழுவில் நாங்கள் இடம் பெறுவதா? வேண்டாமா என்பதை எங்கள் கட்சி கூட்டத்தில்
முடிவு செய்வோம்' என, பாரதிய ஜனதா கட்சியின் செயலர் கிரித் சோமய்யா
தெரிவித்துள்ளார்.