/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/241 விநாயகர் சிலைகள் @காவை புறநகரில் பிரதிஷ்டை241 விநாயகர் சிலைகள் @காவை புறநகரில் பிரதிஷ்டை
241 விநாயகர் சிலைகள் @காவை புறநகரில் பிரதிஷ்டை
241 விநாயகர் சிலைகள் @காவை புறநகரில் பிரதிஷ்டை
241 விநாயகர் சிலைகள் @காவை புறநகரில் பிரதிஷ்டை
ADDED : செப் 01, 2011 01:53 AM
குறிச்சி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில், 241 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.சதுர்த்தியை முன்னிட்டு, புறநகரில் போத்தனூர், குனியமுத்தூர், செட்டிபாளையம், மதுக்கரை, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காருண்யா, வடவள்ளி, பேரூர், க.க.சாவடி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், இந்து முன்னணி சார்பில் 116, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் 12, வி.எச்.பி., சார்பில் 17, பாரத் சேனா சார்பில் ஒன்று, இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) 22, சிவசேனா சார்பில் இரண்டு, பா.ஜ., சார்பில் நான்கு, பொதுமக்கள் சார்பில் 62 உள்பட 241 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.அனைத்து பகுதிகளிலும் அதிகாலை 4.30 மணியளவில், கணபதி பூஜையுடன் விழா துவங்குகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் விழாவின் முடிவில், இச்சிலைகள் அனைத்தும் குறிச்சிகுளம், வாளையார் டேம், சாடிவயல் உள்பட ஆறு இடங்களில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. ஏற்பாடுகளை அந்தந்த அமைப்பு நிர்வாகிகள் செய்துள்ளனர்