முல்லா ஒமர் இறக்கவில்லை : தலிபான்கள் தகவல்
முல்லா ஒமர் இறக்கவில்லை : தலிபான்கள் தகவல்
முல்லா ஒமர் இறக்கவில்லை : தலிபான்கள் தகவல்
காபூல் : 'தலிபான் பயங்கரவாதத் தலைவர் முல்லா முகம்மது ஒமர் இறந்துவிட்டார் என்ற செய்தி தவறானது.
இதுகுறித்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகிதீன் அளித்த பேட்டியில், 'எங்களது இணையதளங்கள் மற்றும் இ-மெயில்களில், எங்களது தலைவர் முல்லா முகம்மது ஒமர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. இது, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் சதிச் செயல். எங்களது இணையதளங்களில் ஊடுருவி இது போன்ற தவறான செய்தியை பரப்பியுள்ளனர். இதற்கு நாங்கள் பழி வாங்குவோம்.
எங்களது எதிரிகள் உயர் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளனர். ஆதலால், எளிதாக எங்களது தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளங்களை ஊடுருவுகின்றனர். தோல்வியை சந்தித்து வருவதால், இது போன்று புரளிச் செய்திகளை பரப்பி வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கன் நாட்டு ராணுவத்தினரின் உதவியுடன், அந்நாட்டின் ஆதிக்கத்தில் இருந்து தலிபான் பயங்கரவாதிகளை, 2001ம் ஆண்டில், அமெரிக்கா விரட்டியடித்தது. அப்போது நடந்த தாக்குதலில், பயங்கரவாதி முல்லா முகம்மது ஒமர் ஒற்றைக் கண்ணை இழந்தார். இதையடுத்து, பாகிஸ்தானின் குவெட்டா நகருக்கு ஒமர் தப்பியோடியதாக நம்பப்படுகிறது. ஆனால், 'குவெட்டாவில் ஒமர் இல்லை; ஆப்கனில் இருக்கிறார்' என்று தலிபான்களும், பாகிஸ்தானும் கூறி வருகின்றன.