/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அன்னா உண்ணாவிரத போராட்டத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை :பிருந்தா கராத் குற்றச்சாட்டுஅன்னா உண்ணாவிரத போராட்டத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை :பிருந்தா கராத் குற்றச்சாட்டு
அன்னா உண்ணாவிரத போராட்டத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை :பிருந்தா கராத் குற்றச்சாட்டு
அன்னா உண்ணாவிரத போராட்டத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை :பிருந்தா கராத் குற்றச்சாட்டு
அன்னா உண்ணாவிரத போராட்டத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை :பிருந்தா கராத் குற்றச்சாட்டு
ADDED : ஆக 26, 2011 12:10 AM
ஊட்டி : ''அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை மத்திய அரசு முறையாக
கையாளவில்லை,'' என மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா
கராத் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் பிருந்தா கராத் நிருபர்களிடம்
கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல ஊழல் குற்றச்சாட்டுகளில்
சிக்கியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு, '2 ஜி' ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில்
பல முறைகேடுகள் நடந்துள்ளன. கே.ஜி., பேசினில் எரிவாயு எடுக்க தனியார்
நிறுவனத்துக்கு உரிமை அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது. இந்த பிரச்னையும்
விரைவில் விஸ்வரூபம் எடுக்கும். பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா
நிறுவனம் தனியார் விமான நிறுவனங்கள் லாபமடைவதற்காகவே
சீரழிக்கப்பட்டது.ஊழலுக்கு எதிராக இந்த அரசு எவ்வித நடவடிக்கையும்
எடுப்பதில்லை. மக்கள் போராடினாலும் கண்டுக்கொள்வதில்லை. ஊழலுக்கு எதிரான
போராட்டத்தை மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டு வருகிறது. அன்னா ஹசாரேவின்
உண்ணாவிரத போராட்டத்தையும் முறையாக கையாளவில்லை. அரசு கொண்டு வந்துள்ள
லோக்பால் மசோதாவை திரும்ப பெற வேண்டும். அதில் மாற்றம் கொண்டு வந்து
மீண்டும் பார்லிமென்டில் தாக்கல் செய்ய வேண்டும். லோக்பால் மசோதாவில் நீதி
துறையை கொண்டு வருவதை மா.கம்யூ., எதிர்க்கிறது. மசோதாவை நிறைவேற்ற மத்திய
அரசு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின்
செயல்பாடுகள் நல்ல முறையில் உள்ளன. தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை
நிறைவேற்றி வருகிறது. தேயிலை பிரச்னையில் இடைதரகர்கள் தான் லாபமடைகின்றனர்;
விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை. இதனால், பசுந்தேயிலைக்கு
குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும். ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையை
புனரமைக்க வேண்டும். இவ்வாறு, பிருந்தா கராத் கூறினார்.


