/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மோட்டார் போக்குவரத்து அதிகாரியுடன் கட்டிப்பிடித்து உருண்ட மாஜி கவுன்சிலர்மோட்டார் போக்குவரத்து அதிகாரியுடன் கட்டிப்பிடித்து உருண்ட மாஜி கவுன்சிலர்
மோட்டார் போக்குவரத்து அதிகாரியுடன் கட்டிப்பிடித்து உருண்ட மாஜி கவுன்சிலர்
மோட்டார் போக்குவரத்து அதிகாரியுடன் கட்டிப்பிடித்து உருண்ட மாஜி கவுன்சிலர்
மோட்டார் போக்குவரத்து அதிகாரியுடன் கட்டிப்பிடித்து உருண்ட மாஜி கவுன்சிலர்
ADDED : செப் 20, 2011 11:42 PM
கும்பகோணம்: கும்பகோணம் மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தில் இன்ஸ்பெக்டருடன் முன்னாள் கவுன்சிலர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கட்டிப்பிடித்து உருண்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் மெயின்ரோட்டில் கும்பகோணம் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக உள்ள முக்கண்ணன் மீது பணம் வாங்குவதாக யாரோ ஒருவர் மேலதிகாரிக்கு மொட்டைக்கடிதம் போட்டுள்ளார். இதுபற்றி அலுவலகத்தில் தகாத வார்த்தைகளால் பொதுவாக திட்டிக்கொண்டிருந்தார். டிரைவிங் லைசென்ஸ் சம்மந்தமாக நேற்று காலை அங்கு வந்த கும்பகோணம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், 'அலுவலகத்தில் ஏன் சார் இப்படி பேசுகிறீர்கள்?' என்று இன்ஸ்பெக்டரை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின் வாசலுக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் முக்கண்ணனிடம் ரமேஷ் கையெழுத்துக் கேட்டு சென்றுள்ளார். அப்போதும், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு திட்டிக்கொண்டதாக தெரிகிறது. இருவரும் கட்டிப்பிடித்தவாறு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கீழே விழுந்து உருண்டனர். பின் அங்கிருந்தவர்களால் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ரமேஷ் பட்டீஸ்வரம் போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர்.