/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சர்வதேச நடவடிக்கை தினத்தையொட்டி மத்திய தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்சர்வதேச நடவடிக்கை தினத்தையொட்டி மத்திய தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்
சர்வதேச நடவடிக்கை தினத்தையொட்டி மத்திய தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்
சர்வதேச நடவடிக்கை தினத்தையொட்டி மத்திய தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்
சர்வதேச நடவடிக்கை தினத்தையொட்டி மத்திய தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 02, 2011 01:41 AM
புதுச்சேரி : உலக தொழிற்சங்க சம்மேளன மாநாட்டு முடிவின்படி, புதுச்சேரியில் நாளை, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், ஏ.ஐ.டி.யூ.சி., அபிஷேகம் கூறியதாவது:ஏதென்ஸ் நகரில் நடந்த உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் 16வது மாநாட்டில், உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள்நாளை 3ம் தேதியை சர்வதேசநடவடிக்கை தினமாக கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரியில் சர்வதேச நடவடிக்கை தினம் நாளை (3ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது.இதையொட்டி, அண்ணா சாலை பிலால் ஓட்டல் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு, கூட்டு பேச்சுவார்த்தை, கூட்டு ஒப்பந்தங்கள், தொழிற்சங்க மற்றும் ஜனநாயக உரிமைகள், விலைவாசிக்கேற்ற உயரிய ஊதியம், நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகள் நடத்திய தேசிய மாநாட்டில், வரும் நவம்பர் 8ம் தேதி நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கக் கூடாது. அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.பி.எப்., போனஸ், இஎஸ்ஐ., உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்படும். இவ்வாறு அபிஷேகம் கூறினார். தொழிற்சங்க நிர்வாகிகள் ஐ.என். டி.யூ.சி., பலராமன், சி.ஐ.டி.யூ., முருகன், சிவக்குமார், எச்.எம். எஸ்., சந்திரசேகரன், பி.எம்.எஸ்., ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


