சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை
சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை
சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை
ADDED : ஆக 05, 2011 12:41 AM
திருப்பூர் : மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் சுதந்திர தின
கொண்டாட்டத்துக்காக, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கலை நிகழ்ச்சி ஒத்திகை
நேற்று நடத்தப் பட்டது.மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின
கொண்டாட்டம், சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் வரும் 15ல் நடக்கிறது.
திருப்பூர் பகுதியில் உள்ள 11 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலை
நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியுடன் போலீசார்
அணிவகுப்பு, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கல், சுதந்திர போராட்ட தியாகிகள்
கவுரவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் தேசபக்தி பாடல்களுக்கு நடனம்,
யோகா செயல்முறை, ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கின்றன. நிகழ்ச்சி
நடைபெறும் கல்லூரி மைதானத்தில் முதல்கட்ட ஒத்திகை நேற்று நடந்தது. முதன்மை
கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக் மேற்பார்வையிட்டு, சில
திருத்தங்களை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் வரிசையாக வரவேண்டிய கலை
நிகழ்ச்சிகள் முறைப்படுத்தப்பட்டன.