தவறான சிகிச்சை: அரசு மருத்துவமனையில் முற்றுகை
தவறான சிகிச்சை: அரசு மருத்துவமனையில் முற்றுகை
தவறான சிகிச்சை: அரசு மருத்துவமனையில் முற்றுகை
ADDED : செப் 09, 2011 12:39 PM
கரூர்: நாய்கடித்த நோயாளிக்கு தவறான சிகிச்சையளித்ததாக எழுந்த புகாரின் அரசு மருத்துவமனை டாக்டரை கண்டித்து பாதிக்கப்பட்ட நோயாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
கரூர்-கோவை ரோடு காயத்ரிநகரைச் சேர்ந்தவர் சின்னப்பன் (48) . ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நாய் கடித்துவிட்டதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். இங்கு அவருக்கு டாக்டர்கள் நாய்கடிக்கு மாற்று மருந்து கொடுத்ததால் இவரது கை, கால்கள் செயல் இழந்து போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை வந்த சின்னப்பன் திடீரென, டாக்டர்களை கண்டித்து மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளி்க்க முயன்றார். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.