ADDED : ஜூலை 11, 2011 03:03 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில், போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஆத்தூர் அடுத்த மல்லியக்கரை, அரசநத்தம் கிராமம், கோவிந்தராஜா பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டுவேல்(50). அவர், ராசிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் பணி முடிந்து, ராசிபுரத்திலிருந்து பைக்கில் தனது வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். திம்மநாயக்கன்பட்டி அடுத்த ஒண்டிக்கடை அருகே வந்தபோது, பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. விபத்தில், எஸ்.எஸ்.ஐ., செங்கோட்டுவேல் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். விபத்து குறித்து மங்களபுரம் இன்ஸ்பெக்டர் அன்புராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த எஸ்.எஸ்.ஐ., செங்கோட்டுவேலுக்கு, சுசிலா என்ற மனைவியும், பாலகிருஷ்ணன், பாரத்குமார் என்ற மகன்களும் உள்ளனர்.