/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துங்கள்:எஸ்.பி., பேச்சுகுழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துங்கள்:எஸ்.பி., பேச்சு
குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துங்கள்:எஸ்.பி., பேச்சு
குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துங்கள்:எஸ்.பி., பேச்சு
குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துங்கள்:எஸ்.பி., பேச்சு
ADDED : ஆக 14, 2011 10:31 PM
அவிநாசி : ''குழந்தைகளின் திறமையை பெற்றோர் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்,'' என்று எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் நடுநிலைப்பள்ளியில், விஸ்வபாரதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது.
ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கி, எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசியதாவது:நம் நாட்டில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இரு வேறுபாடு இருக்கிறது. இரண்டும் சமமாகும்போது, நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஒரு மனிதனுக்கு உயிரை விட, கல்வியே முக்கியம் என்றுணர்ந்து, அதை ஊக்கப்படுத்தும் வகையில் சீருடை வழங்குவது வரவேற்கத்தக்கது. கிராமப்புற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது வருத்தமாக உள்ளது. பெற்றோர், தங்களது குழந்தையின் திறமையை முளையிலேயே கிள்ளியெறிந்து விடக்கூடாது; அதை ஊக்குவிக்கும் செயல்களில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி அடைய முடியும். சுதந்திர தினத்தை கொண்டாடும் சமயத்தில், அதன் மதிப்பை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்து 65வது ஆண்டில் நாம் உள்ளோம். கல்வியை அடிப்படை உரிமையாக கொண்ட சட்டமே இந்தியாவில் புரட்சி ஏற்படுத்திய சட்டம். நமக்கு கல்வியை அளித்த முன்னாள் முதல்வர் காமராஜர், சுதந்திரம் வாங்கி தந்த காந்திஜி உள்ளிட்ட தலைவர்களால்தான், இந்தியா முன்னேறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறிப்பிட்டதுபோல், 2020ல் வல்லரசாக திகழ வேண்டும். அறியாமை இருளை புரட்டி போடுவது கல்வி என்பதை யாராலும் மறுக்க முடியாது. கிராமத்தின் பெருமையை உணர்த்த மாணவர்கள் நன்றாக பயில வேண்டும், என்றார்.முன்னதாக, விஸ்வபாரதி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஷெரீப், துணை தலைவர் பாலசுந்தரம், ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி, தலைமையாசிரியர் (ஓய்வு) துரைசாமி உட்பட பலர் பேசினர்.கவுன்சிலர் சண்முகம் நன்றி கூறினார்.


