மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 16, 2011 02:19 AM
திட்டக்குடி:திட்டக்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இரண்டு
டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திட்டக்குடி அருகே உள்ள வெள்ளாற்றில்
அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து தாசில்தார்
சையத்ஜாபர், மண்டல துணை தாசில்தார் ராஜா, பாலு ரோந்துப் பணியில்
ஈடுபட்டனர்.
அப்போது கொரக்கவாடியில் இருந்து பனையாந்தூரை நோக்கிச் சென்ற இரண்டு
டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய
வந்தது. விசாரணையில், டிரைவர்கள் வெங்கடாசலம், சுரேஷ் இருவரும்
வேப்பந்தட்டை அடுத்த வெள்ளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்தது.
வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டு டிராக்டர்கள் மற்றும் டிப்பர்களை பறிமுதல்
செய்து திட்டக்குடி போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.