நான் தமிழகத்திற்கும் எம்.பி.,தான்: என்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
நான் தமிழகத்திற்கும் எம்.பி.,தான்: என்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
நான் தமிழகத்திற்கும் எம்.பி.,தான்: என்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
ADDED : ஜூலை 03, 2024 05:49 PM

சென்னை: நான் தமிழகத்திற்கும் எம்.பி., தான் என மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரான பிறகு முதன் முதலாக, சென்னை வந்த நடிகர் சுரேஷ் கோபி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கேரளாவில் தேர்தலுக்கு முன்பே தமிழகத்திற்கான பிரதிநிதியாகவும் நான் செயல்படுவேன் என கூறியுள்ளேன். நான் தமிழகத்திற்கும் எம்.பி., தான். சுற்றுலாத்துறை பழக்கமான துறை தான்.
சுற்றுலாத்துறை பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஆனால் பெட்ரோலியத்துறையில் கற்று வருகிறேன். சபரிமலை விவகாரத்தை தொட்டவர்கள் இன்று இல்லாமல் போய்விட்டார்கள். எனக்கு நடிக்க வாய்ப்பு, தூங்க இடம் கொடுத்தது சென்னை தான். தமிழகத்தை நேசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் 'நோ'
நீட் தேர்வு குறித்து நிருபர் கேள்விக்கு, 'அரசியல் குறித்து பேச வேண்டாம்' என சுரேஷ் கோபி ஒரே வரியில் பதில் அளித்தார்.