இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம்: சசிகலா திடீர் "சுறுசுறுப்பு"
இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம்: சசிகலா திடீர் "சுறுசுறுப்பு"
இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம்: சசிகலா திடீர் "சுறுசுறுப்பு"
ADDED : ஜூலை 03, 2024 04:54 PM

சென்னை: 'அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்' என சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது: ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்.
90% நிறைவு
அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். சுற்றுப்பயணம் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி தான் போக போறேன். அப்பொழுது நீங்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தமிழக போலீசார் சரியாக செயல்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.