பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சென்னை : பூண்டி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், பூண்டியிலிருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், பூண்டி அணையிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு, 845 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு, 3,645 மில்லியன் கன அடியும், 24 அடி ஆழமும் கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட், 10ம் தேதி, 1,583 மில்லியன் கனஅடியாக இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு, 465 மில்லியன் கன அடி நீர் இருப்பு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் குடிநீருக்காக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு, 160 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வெயில் காலங்களில் பூண்டியில் இருந்து நீர் திறந்துவிட்டால் வரும் வழியில் தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. கடந்த சில வாரங்களாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஓரளவுக்கு முழுமையாக வந்து சேர்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக பூண்டியிலிருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது' என்றார்.


