/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நண்பனை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைதுநண்பனை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
நண்பனை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
நண்பனை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
நண்பனை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூலை 15, 2011 12:57 AM
முதுநகர் : கடலூர் முதுநகர் அருகே நண்பனை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர் அடுத்த சின்னபிள்ளையார் மேட்டைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம் மகன் உதயசூரியன்,30. அதே ஊரைச் சேர்ந்த உதயசூரியனின் நண்பரான சிவா, 25. அப்பகுதியில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை உதயசூரியன் கண்டித்ததால் நண்பர்களான உதயசூரியன், சிவா இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உதயகுமார், சிவாவின் தந்தை பாலசுப்ரமணியத்தை தாக்கினார். தனது தந்தையை அடித்ததற்காக உதயசூரியனை பழி தீர்க்க சிவா திட்டம் தீட்டினர். இதன்படி கடந்த 12ம் தேதி இரவு வீட்டில் இருந்த உதயசூரியனை, சம்பத் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே மறைந்திருந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ், கிளிண்டன் பிரபு, கனகராஜ், சம்பத் ஆகியோர் சேர்ந்து உதயசூரியனை கொலை செய்தனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சம்பத், 30, கிளின்டன் பிரபு 19, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கொலை வழக்கில் அணுக்கம்பட்டைச் சேர்ந்த விமல்ராஜ், 28. என்பவருக்கு தொடர்புடையது தெரிந்தது. இந்நிலையில் சங்கொலிக்குப்பம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த விமல்ராஜை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், சிவா, விக்னேஷ், கனகராஜை தேடி வருகின்றனர்.