நடுவானில் விமான ஜன்னல் விலகியதால் பரபரப்பு
நடுவானில் விமான ஜன்னல் விலகியதால் பரபரப்பு
நடுவானில் விமான ஜன்னல் விலகியதால் பரபரப்பு
ADDED : ஜூலை 03, 2025 01:05 AM

குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற விமானத்தின் ஜன்னல் கதவு நடுவானில் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 'எஸ்ஜி1080' விமானம் நேற்று கோவாவில் இருந்து மஹாராஷ்டிராவில் புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னல் கதவு திடீரென விலகியது.
அதை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இது வைரலான நிலையில் அந்த விமானம் புனேவில் தரையிறங்கியதும் சரி செய்யப்பட்டதாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் பயணிகள் பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், விமானத்தில் கேபின் அழுத்தம் இயல்பாகவே இருந்தது என்றும் விமானம் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.