பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் மூன்று வகை சான்றிதழ்கள்: அரசு திட்டம்
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் மூன்று வகை சான்றிதழ்கள்: அரசு திட்டம்
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் மூன்று வகை சான்றிதழ்கள்: அரசு திட்டம்

சென்னை : 'பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பு, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்களை, டிசம்பர் இறுதிக்குள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வெழுதிய ஒன்பதரை லட்சம் மாணவர்களில், நான்கு லட்சம் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். எனவே, இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பம் செய்யவும், தாசில்தார்களுக்கு அக்., 15க்குள் அனுப்பவும், உரிய விசாரணைக்குப் பின் டிசம்பர் இறுதிக்குள் பள்ளிகளுக்கு சான்றிதழ்களை அனுப்பிடவும் அரசு முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் என, அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.