காலியிடம் நிரப்ப நடவடிக்கை அமைச்சர் பச்சைமால் தகவல்
காலியிடம் நிரப்ப நடவடிக்கை அமைச்சர் பச்சைமால் தகவல்
காலியிடம் நிரப்ப நடவடிக்கை அமைச்சர் பச்சைமால் தகவல்
ADDED : ஜூலை 31, 2011 11:08 PM

ஆனைமலை: ''வனத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப, நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என அமைச்சர் பச்சைமால் கூறினார்.தமிழக வனத்துறை அமைச்சர்
பச்சைமால், நேற்று வால்பாறை பகுதியில், மனித-வனவிலங்கு மோதல் குறித்து,
ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தொழில் துறை அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,
தாமோதரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சென்றனர். பின் பொள்ளாச்சி வந்த
அமைச்சர் பச்சைமால், நிருபர்களிடம் கூறியதாவது:வன எல்லைப் பகுதியில் அகழி
வெட்டுதல், மின்சார வேலி அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வனத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுப்பேன். நீலகிரியில்
யானைகளின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, மூங்கில் நாற்றுகள் நட்டது போல்,
தமிழகத்தின் அனைத்து வனப்பகுதிகளிலும், புதிய முயற்சிகள் செய்யப்படும்.
ரேடியோ காலர் கருவியைப் பயன்படுத்த, இன்னும் மாற்று வழிகள் பற்றி
ஆராயப்படும். இது போன்று, புதிய கருவிகளை ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்தால், அதற்குத் தகுந்த ஒத்துழைப்புத் தரப்படும்.இவ்வாறு
அமைச்சர் பச்சைமால் கூறினார்.


