/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றியவர்களுக்கு எம்.எட் ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவுஉதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றியவர்களுக்கு எம்.எட் ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு
உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றியவர்களுக்கு எம்.எட் ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு
உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றியவர்களுக்கு எம்.எட் ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு
உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றியவர்களுக்கு எம்.எட் ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு
திருநெல்வேலி : இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டதால் இப்பணியை துறந்து அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களாக பணியில் பலர் சேர்ந்தனர்.
அவ்வாறு அரசு பள்ளிகளில் எம்.எட் ஊக்க ஊதியம் வழங்கிய பின்னர் அதை திரும்ப செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டதாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொது செயலாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களாக பணிபுரிந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டதால் அப்பணியை துறந்து அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் தனியார் பள்ளிகளில் இறுதியாக பெற்று வந்த ஊதியத்தை அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்படவில்லை.
இவர்களை புதிய நியமனமாக கருதி முதுகலை ஆசிரியர்களுக்கான ஆரம்ப ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் இந்த ஆசிரியர்கள் உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே பெற்ற எம்.எட் உயர் கல்வி தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசு பள்ளிகளில் நிர்ணயம் செய்யப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஆரம்ப ஊதிய வகிதத்தில் எந்தவிதத்தில் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் தனியார் பள்ளிகளில் இறுதியாக பெற்று வந்த ஊதியத்தையே தொடர்ந்து அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டால் மட்டும்தான் அவர்கள் ஏற்கனவே எம்.எட் உயர் கல்வித் தகுதிக்கு பெற்ற ஊக்க ஊதியம் சேர்ந்திருக்கும். ஆனால் அரசு பளளிகளில் முதுகலை ஆசிரிர்களாக பணியில் சேரும் போது புதிய நியமனமாக கருதி முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தில் ஆரம்ப ஊதியத்தில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் எம்.எட் உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வை விதிகளின்படி பெற தகுதி உடையவர் ஆவர்.
எனவே, இந்த ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்த பின்னர் முதுகலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் ஆரம்ப ஊதியத்தில் ஊதிய நிர்ணயம் செய்தவர்களுக்கு எம்.எட் உயர் கல்வி தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தவறு என தெரிவித்து அத்தொகையை பிடித்தம் செய்ய தெரிவித்திருந்தால் அவ்வாணையை ரத்து செய்ய முதன்மை கல்வி அலுவலர் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.