/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சமச்சீர் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கைசமச்சீர் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை
சமச்சீர் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை
சமச்சீர் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை
சமச்சீர் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை
ADDED : செப் 23, 2011 11:19 PM
விருதுநகர் : சமச்சீர் பாடப்புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க அரசு
நடவடிக்கை எடுத்துள்ளது.
சமச்சீர் கல்வித்திட்டம் முழுமையாக
செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாடப் புத்தகங்கள் முழுமையாக கிடைக்காத
நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பலர், புத்தகம் இல்லாத நிலையில்,
இணையதளத்தில் டவுன் லோடு செய்து படிக்கின்றனர். இதை தொடர்ந்து, அனைத்து
மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
எடுத்துள்ளது. தமிழ் நாடு பாட நூல் நிறுவனத்ததால் அச்சிடப்பட்ட, அரசு
கிடங்குகளில் மீதம் உள்ள புத்தகங்கள் பட்டியல் பெறப்பட்டு, அனைத்து முதன்மை
கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவையான புத்தகங்களை
அருகில் உள்ள கிடங்குகளில் பெற்று மாணவர்களுக்கு வழங்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பற்றாக்குறை புத்தகங்கள் குறித்து வகுப்பு
வாரியாக கணக்கிட்டு, தேவையான புத்தகங்களை வழங்க, கல்வி அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.