ரூ.1,000 கோடியில் கொச்சியில் மருத்துவ நகரம்
ரூ.1,000 கோடியில் கொச்சியில் மருத்துவ நகரம்
ரூ.1,000 கோடியில் கொச்சியில் மருத்துவ நகரம்
ADDED : செப் 28, 2011 09:54 PM

திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான, கொச்சி மருத்துவ நகர் சுற்றுலா பிரைவேட் லிமிடெட் சார்பில், கொச்சியில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மருத்துவ சிகிச்சை நகரம் அமைக்க, மாநில அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது குறித்து, கபில்தேவும் மற்றும் அந்நிறுவன நிர்வாகிகளும் நேற்று முன்தினம், திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன் சாண்டியுடன் விரிவாக ஆலோசித்தனர்.