புரோக்கர்களை அணுகாமல் ரூ.6000க்கு மணல் வாங்கலாம் : லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
புரோக்கர்களை அணுகாமல் ரூ.6000க்கு மணல் வாங்கலாம் : லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
புரோக்கர்களை அணுகாமல் ரூ.6000க்கு மணல் வாங்கலாம் : லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
ADDED : ஆக 13, 2011 01:22 AM
மதுரை : ''மதுரையில் ஒரு லோடு மணல் ரூ.6000க்கு கிடைக்கிறது.
புரோக்கர்கள் மூலம் ரூ.6500க்கு வாங்கலாம். இதை அறியாமல் ரூ.16 ஆயிரத்திற்கு வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்,'' என லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.ஆறு மாதங்களுக்கு முன், தேர்தல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம், அபிராமம் பகுதி குவாரிகள் மூடப்பட்டதால், மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் தஞ்சை, திருச்சியில் இருந்து மதுரைக்கு மணல் கொண்டு வரப்பட்டு, ஒரு லோடு(10 டன்) ரூ.16 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன், எமனேஸ்வரம், அபிராமம் குவாரிகள் திறக்கப்பட்டன. இங்கு மணல் அள்ள லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், மணல் எடுத்து வர இரண்டு நாட்களாகின. இதை கணக்கிட்டு, ஒரு லோடு ரூ.10 ஆயிரத்திற்கும், திருச்சி, தஞ்சை குவாரிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட மணலுக்கு ரூ.15 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தற்போது தட்டுபாடின்றி மணல் கிடைக்கும் நிலையில், லோடு ஒன்று ரூ.6000க்கு விற்கப்படுகிறது. ஆனால், சில உரிமையாளர்கள் பழைய விலையிலேயே விற்று பொதுமக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. அரைபாடி மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவிராஜன், செயலாளர் லோகநாதன் கூறுகையில், ''மதுரை விரகனூர் ரிங் ரோடு பகுதியில் எங்கள் சங்கம் சார்பில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை லோடு ஒன்று ரூ.6000த்திற்கு விற்கிறோம். புரோக்கர் மூலம் வந்தால் கூடுதலாக ரூ.500 செலவாகும். எனவே பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க நேரடியாக எங்களை அணுகலாம்,'' என்றனர்.


