/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வல்லம்-கண்ணப்புளிமேடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்வல்லம்-கண்ணப்புளிமேடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வல்லம்-கண்ணப்புளிமேடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வல்லம்-கண்ணப்புளிமேடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வல்லம்-கண்ணப்புளிமேடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2011 06:13 AM
குற்றாலம் : 'வல்லம் - கண்ணப்புளிமேடு சாலையை சீரமைக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தென்காசி யூனியன் வல்லம் பஞ்., பகுதியிலிருந்து குண்டாறு அணைப்பகுதியான கண்ணுப்புளிமேடு வரை விவசாயம் நிறைந்த பகுதியாகவும், அதிக நீர்வரத்துள்ள பகுதியாகவும் காணப்படுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் இரவு, பகல் பாராது எந்நேரமும் இவ்வழியாகத்தான் தங்கள் பணிகளுக்காக சென்று வருவார்கள். மேலும் சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் குண்டாறு அணை, புனித ஸ்தலமாக விளங்கும் காட்டுப்பள்ளிவாசல் சென்று வரவும் இந்த சாலையைத்தான் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகவும், கரடு முரடாகவும் காணப்படுவதால் இவ்வழியாக வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு டிராக்டர், மாட்டு வண்டி செல்ல முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரம் மற்றும் விளை பொருட்களை தலை சுமையாகவே கொண்டு செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டாறு செல்லும் சாலையை சீரமைக்க ரோட்டின் இருபுறமும் ஜல்லி கற்களை தட்டி சென்றனர். ஆனால் இதுவரை சாலை பணியை மேற்கொள்ளவில்லை.
எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், குண்டாறு செல்லும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி உடனே சாலை வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


