பாக்., ஏவுகணை சோதனையால் கவலையில்லை: மார்ஷல் நாயக்
பாக்., ஏவுகணை சோதனையால் கவலையில்லை: மார்ஷல் நாயக்
பாக்., ஏவுகணை சோதனையால் கவலையில்லை: மார்ஷல் நாயக்
ADDED : ஜூலை 27, 2011 12:25 AM
புதுடில்லி : அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. ஆனால், அத்தகைய தாக்குதலுக்கு ஆளாக நேரிட்டால், மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று விமானப்படை தளபதி மார்ஷல் நாயக் கூறியுள்ளார். பாகிஸ்தான், அண்மையில் 60 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக் கூடிய 'நாசிர்' ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. மேலும், ராணுவத்தில் 24க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் நாயக் டில்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:இந்தியா, யார் மீதும் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆனால், அத்தகைய தாக்குதலுக்கு ஆளாக நேரிட்டால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும். நாட்டிற்கு எதிராக அரசியல் அல்லது ராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் கூட அணு ஆயுதம் போன்றதுதான். பாகிஸ்தானின் அணு ஏவுகணை சோதனை குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை.


