ADDED : ஆக 03, 2011 06:14 PM
தேனி: ஜெயிலுக்குள் கைதி ஒருவர், ஆண் உறுப்பை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 45. இவரது மனைவி செல்வி, 35. இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகின்றன. மனைவி நடத்தையில் ராஜா சந்தேகப்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த செல்வி, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராயப்பன்பட்டி போலீசார் ராஜாவை கைது செய்து, உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்தனர்.
ராஜாவிற்கு சிறை ஊழியர்கள் காபி கொடுத்தனர். காபி குடித்து விட்டு பாத்ரூம் சென்ற ராஜா, காபி குடித்த டம்ளரை கத்தி போல் மடக்கி ஆணுறுப்பை அறுத்தார். ரத்தம் கொட்டிய நிலையில் வலியால் துடித்த ராஜா மயங்கி விழுந்தார். சிறைக்காவலர்கள் அவரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜெயில் கண்காணிப்பாளர் முருகேசன் உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தற்கொலைக்கு முயன்றதாக ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.