/உள்ளூர் செய்திகள்/தேனி/போலி டாக்டர்களால் அதிகரிக்கும் உயிர் பலிபோலி டாக்டர்களால் அதிகரிக்கும் உயிர் பலி
போலி டாக்டர்களால் அதிகரிக்கும் உயிர் பலி
போலி டாக்டர்களால் அதிகரிக்கும் உயிர் பலி
போலி டாக்டர்களால் அதிகரிக்கும் உயிர் பலி
ADDED : செப் 06, 2011 12:55 AM
தேனி : தேனி மாவட்டத்தில் போலி டாக்டர்களால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
போலி டாக்டர்களில் பலர் வீடு, வீடாகவும் சென்று சிகிச்சை அளிக்கின்றனர். இவர்கள் முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி, நோயாளிகள் சொல்வதை கேட்டு மருந்து கொடுக்கின்றனர். ஆரம்பத்திலேயே அதிக டோஸ் கொண்ட மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர்.இதனை சாப்பிடும் நோயாளிகளும், இவர்களிடம் ஊசி போடும் நோயாளிகளும் ஒவ்வாமை ஏற்பட்டு, நோய் பாதிப்பு அதிகரித்து இறந்து விடுகின்றனர். குறிப்பாக போலி டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் பழக்கம் உள்ளது. இதுவும் நோயாளிகளின் உடல் நிலைக்கு ஏற்ப செலுத்துவதில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள், ஆதரவற்றவர்கள், வெளி நடப்புகள் தெரியாத ஏழைகள் போலி டாக்டர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க இந்திய மருத்துவ சங்கம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. போலி டாக்டர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடமும், போலீஸ் நிர்வாகத்திடமும் வழங்கி உள்ளது. இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.