/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 05, 2011 12:47 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அடிப்படை வசதிகளை கேட்டு பொது மக்கள் 2 மணி நேரம் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த சித்தலிங்கன் கொட்டாய் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதமாக முறையாக குடிநீர் வியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதவிர சாலை வசதியில்லை. பள்ளிகள் இல்லை. அதனால், இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய உள்ளது. அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9.30 மணி முதல் சித்தலிங்கன் கொட்டாய் கிராமத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிறப்பு தாசில்தார் ரவி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்னைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.