தேர்தல் கமிஷன் உத்தரவு : வேலை உறுதி திட்டத்தில் பாதிப்பு
தேர்தல் கமிஷன் உத்தரவு : வேலை உறுதி திட்டத்தில் பாதிப்பு
தேர்தல் கமிஷன் உத்தரவு : வேலை உறுதி திட்டத்தில் பாதிப்பு

சிவகங்கை,: ''தேசிய வேலை உறுதி திட்ட பணிகளை கண்காணிக்க தற்காலிக ஊழியர்களை நியமிக்க நியமித்துக் கொள்ளலாம் என'' மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.எனினும் கடுமையான உத்தரவால் கிராம மக்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணி செய்வோருக்கு வேலை அளவை பொறுத்து 83 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், வேலை உறுதி திட்டத்தில் புதிய பணிகளுக்கு மாநில தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய உத்தரவில், இத்திட்டத்தில் புதிதாக தூர்வாரும் பணிகளை எடுக்க கூடாது. ஏற்கனவே எடுத்த பணிகளை செய்யலாம். இப்பணியில் ஈடுபடுவோருக்கு சம்பளம் தரும் பணியில் கிராம ஊராட்சி தலைவர்கள், கிளார்க்,மக்கள் நலப்பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது. வேலை உறுதி திட்ட பணிகளை கண்காணிக்கும் பொறுப்பை மக்கள் நலப்பணியாளர்களிடம் ஒப்படைக்ககூடாது. தேர்தல் முடியும் வரை, பணிகளை கண்காணிக்க, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தற்காலிக ஊழியர்களாக நியமிக்கலாம். சம்பளம் வழங்கும் பணியில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அலுவலர் ஒருவரை ஈடுபடுத்தவேண்டும். கிராம ஊராட்சியில் பணியாற்றும் எவரும், வேலை உறுதி திட்ட பணிகளை கண்காணிக்க கூடாது என, மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் கமிஷன் கடுமையான உத்தரவிட்டுள்ளது.
இந்த கடுமையான உத்தரவுகளால் கிராமங்களில் நடந்து வரும் வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க புதியதாக தற்காலிக ஊழியர்களை நியமித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டாலும் அதற்கு போதிய அவகாசம் இல்லாத நிலையில் உள்ளாட்சி பணிகள் இருப்பதால் வேலை கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.