/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சங்கரராமன் கொலை வழக்குவிசாரணை கேசட் பார்த்தார் நீதிபதிசங்கரராமன் கொலை வழக்குவிசாரணை கேசட் பார்த்தார் நீதிபதி
சங்கரராமன் கொலை வழக்குவிசாரணை கேசட் பார்த்தார் நீதிபதி
சங்கரராமன் கொலை வழக்குவிசாரணை கேசட் பார்த்தார் நீதிபதி
சங்கரராமன் கொலை வழக்குவிசாரணை கேசட் பார்த்தார் நீதிபதி
ADDED : ஆக 13, 2011 03:01 AM
புதுச்சேரி:சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையின் வீடியோ கேசட்கள், நீதிபதி முன்னிலையில், நேற்று இரண்டாவது நாளாக காண்பிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு
புதுச்சேரி, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில், கடந்த 2009ம்
ஆண்டிலிருந்து நடந்து வருகிறது.இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை முடிந்த
நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களிடம், போலீஸ் அதிகாரி விசாரணை
நடத்தியபோது, எடுத்த வீடியோ கேசட்கள், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்
கோரிக்கைப்படி, நேற்று முன்தினம் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.
இரண்டாவது நாளாக, நேற்று காலை நீதிபதி ராமசாமி முன்னிலையில், கேசட்கள்
திரையிடப்பட்டன. வழக்கு விசாரணை, வரும் 17ம் தேதி நடைபெறும் என்று,
நீதிபதி ராமசாமி அறிவித்தார்.