/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சுப்ரீம் குதிரையேற்றபயற்சி பள்ளி துவக்கம்சுப்ரீம் குதிரையேற்றபயற்சி பள்ளி துவக்கம்
சுப்ரீம் குதிரையேற்றபயற்சி பள்ளி துவக்கம்
சுப்ரீம் குதிரையேற்றபயற்சி பள்ளி துவக்கம்
சுப்ரீம் குதிரையேற்றபயற்சி பள்ளி துவக்கம்
ADDED : செப் 19, 2011 12:56 AM
நாமக்கல்: நாமக்கல், அசோக் நகர் எஸ்.பி., புதூர் ஏரியாவில், சுப்ரீம்
குதிரையேற்ற பயிற்சி பள்ளி துவக்க விழா நடந்தது.விழாவுக்கு, பொன் சன்ஸ்
ரப்பர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., பாஸ்கர் திறந்து வைத்து பேசினார். இது குறித்து பள்ளி
இயக்குனர்கள் சுதாகர், விமலன் கூறும்போது,'குதிரை பயிற்சி, காலை 6 மணி
முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் நடக்கும். 6 வயது
முதல் அனைவருக்கும் குதிரை பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. இப்பயிற்சி,
மூன்று மாதம், ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டு கால பயிற்சியாக
அளிக்கப்படுகிறது' என்றனர்.