/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தல்:மனுத் தாக்கல் நிலவரம்உள்ளாட்சி தேர்தல்:மனுத் தாக்கல் நிலவரம்
உள்ளாட்சி தேர்தல்:மனுத் தாக்கல் நிலவரம்
உள்ளாட்சி தேர்தல்:மனுத் தாக்கல் நிலவரம்
உள்ளாட்சி தேர்தல்:மனுத் தாக்கல் நிலவரம்
திண்டுக்கல்:உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டுக்கொண்டு மனுத்தாக்கல் செய்ததால், மாவட்டத்தில் நேற்று, 1895 மனுக்கள் குவிந்தன.மனுத் தாக்கல் விபரம்:திண்டுக்கல்: நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நால்வரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 24, வார்டு உறுப்பினர் பதவிக்கு 164, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 12 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.பழநி: பாலசமுத்திரம் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஆயக்குடி பேரூராட்சி கவுன்சிலருக்கு நான்கு பேரும், பழநி ஒன்றிய கவுன்சிலர் வார்டுக்கு ஒருவர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 18 பேர் மற்றும் வார்டு உறுப்பினருக்கு 73 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
வேடசந்தூர்: பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு இருவரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு எட்டு பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.கொடைக்கானல்: நகாரட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சைகள் 10 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட மூவரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 17 பேரும், வார்டு உறுப்பினருக்கு 59 பேரும் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.ஒட்டன்சத்திரம்: நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு இருவர் மனுத்தாக்கல் செய்தனர்.
நிலக்கோட்டை: ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 163 பேரும், தலைவர் பதவிக்கு 38 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 19 பேரும், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
வத்தலக்குண்டு: வார்டு உறுப்பினர் பதவிக்கு 106 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 12 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆறு பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு இருவரும், கவுன்சிலர் பதவிக்கு 33 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.குஜிலியம்பாறை: ஊராட்சி தலைவருக்கு ஆறு பேரும், வார்டு உறுப்பினர் 42 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மூவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆத்தூர்: மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலருக்கு தலா ஒருவரும், ஊராட்சி தலைவருக்கு 15 பேரும், வார்டு உறுப்பினருக்கு 107 மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.வடமதுரை: அய்யலூர் பேரூராட்சியில் கவுன்சிலருக்கு ஒருவரும், வடமதுரை பேரூராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏழு பேரும், வார்டு உறுப்பினருக்கு 123, ஒன்றிய கவுன்சிலருக்கு ஒருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.நேற்று மாவட்டத்தில் மொத்தம் 1895 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதில் மாவட்ட கவுன்சிலருக்கு இருவரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 67 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 242 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 1459 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.