/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சப்பை தண்ணீர், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிசப்பை தண்ணீர், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
சப்பை தண்ணீர், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
சப்பை தண்ணீர், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
சப்பை தண்ணீர், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
ADDED : ஆக 14, 2011 10:31 PM
பல்லடம் : பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் குடிநீர், சப்பை தண்ணீர் வினியோகித்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம், கடைகள், வங்கி, ஓட்டல்கள், வீடுகள் உள்ளன. நால் ரோட்டில் சிறு பாலம் அமைக்கும் பணி நான்கு மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணி காரணமாக, பொள்ளாச்சி ரோட்டில் குடிநீர் குழாய் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன.இதனால், கடந்த மூன்று மாதங்களாக பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அத்திக்கடவு குடிநீர், சப்பை தண்ணீர் வினியோகம் நடக்கவில்லை. இரு தண்ணீரும் வராததால் பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.போர்வெல் போடப்பட்டுள்ள வீடுகளுக்கு, தர்ம சங்கடத்துடன் சென்று இரண்டு குடங்கள், மூன்று குடங்கள் என தினமும் தண்ணீர் கேட்டு வாங்கி, தண்ணீர் பிரச்னையை சமாளித்து வருகின்றனர். பாலம் கட்டி முடிக்கும் வரை, லாரிகள் மூலம் அத்திக்கடவு குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.