/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் கட்ட நில விவரங்களுடன் அதிகாரிகள் முகாம்திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் கட்ட நில விவரங்களுடன் அதிகாரிகள் முகாம்
திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் கட்ட நில விவரங்களுடன் அதிகாரிகள் முகாம்
திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் கட்ட நில விவரங்களுடன் அதிகாரிகள் முகாம்
திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் கட்ட நில விவரங்களுடன் அதிகாரிகள் முகாம்
ADDED : ஜூலை 14, 2011 09:38 PM
திருப்பூர் : திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசுத் துறை
அலுவலகங்கள் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள இடங்கள் தொடர்பான ஆவணங்களுடன்,
மாவட்ட உயரதிகாரிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம்
அமைக்கப்பட்டு மூன்றாண்டுகளாகிறது. இன்னும் சொந்த கட்டடம் கட்டப்பட வில்லை.
எஸ்.பி., அலுவலகமும் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. கலெக்டருக்கு முகாம்
அலுவலகம் இல்லாமல் பொதுப்பணித்துறையின் விருந்தினர் மாளிகை, கலெக்டரின்
முகாம் அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது. மாவட்ட அந்தஸ்து பெற்றுள்ள
நிலையிலும், மாவட்ட அளவிலான கோர்ட்டுகள், ஆயுதப்படை போலீஸ் மையம் உட்பட
பல்வேறு அரசுத்துறைகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன. கடந்த ஆட்சியின்
போது, பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டன. மாநில
அளவிலான உயரதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்தும், எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. தற்போதைய அரசு, முதல் பட்ஜெட்டில் திருப்பூரில் கலெக்டர்
அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட கோர்ட்டுகள், அரசு உயரதிகாரிகள்
குடியிருப்பு, சர்க்யூட் ஹவுஸ், ஆயுதப்படை போலீஸ் வளாகம் உள்ளிட்டவை அமைக்க
முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அவற்றுக்கான கட்டடங்கள் அமையும் இடங்கள்
முடிவு செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அந்த இடங்கள் குறித்த முழு
விவரங்கள், சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தடையின்மை
சான்றிதழ், நிலத்தின் அளவு மற்றும் அமைவிடம் குறித்த வருவாய்த்துறை
ஆவணங்கள், கடந்த சில நாட்களாக மிக மும்முரமாகச் சேகரிக்கப்பட்டன.
வருவாய்த்துறையினர், அந்த இடங்களை முழுமையாக அளந்து, மறு ஆய்வுக்கும்
உட்படுத்தினர். அத்தகவல்கள் தொகுக்கப்பட்டு, சென்னையில் நில வருவாய்த்துறை
ஆணையர், நிதித்துறை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் மாநில
அளவிலான அதிகாரிகளின் முடிவுக்காக கொண்டு செல்லப்பட்டன. சம்பந்தப்பட்ட
பகுதியின் வருவாய் அலுவலர்கள், அவற்றை இரண்டு வேன்களில் சென்னைக்கு
எடுத்துச் சென்றுள்ளனர். திருப்பூர் டி.ஆர்,ஓ., - ஆர்.டி.ஓ., -
தாசில்தார் ஆகியோரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். மாநில அளவிலான
அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின், அமைச்சர்கள் மூலம் முதல்வரிடம்
சமர்ப்பிக்கப்படும். அதன் பின், பட்ஜெட்டில் அறிவிப்பு
வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத்தெரிகிறது.


