Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

ADDED : ஆக 08, 2011 03:45 AM


Google News
ஆழ்வார்குறிச்சி : நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த கடையம் வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு கார்பருவத்தில் நெல் குருத்துப்பூச்சியினால் பெருத்த சேதம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது.

தற்போது கார் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நெல் குருத்துப்பூச்சியை பூச்சி மருந்துகள் தெளித்து முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொண்டால் குருத்துப்பூச்சியை ஒழிக்க முடியும்.நெல் நடவு செய்தவுடன் ஒரு ஏக்கரில் 5 எண்ணம் நெல் குருத்துப்பூச்சிக்கான இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். இப்பொறியிலுள்ள பெண் அந்துப்பூச்சியின் வாசனைக்கு ஆண் அந்துப்பூச்சிகள் கவர்ந்திழுக்கப்பட்டு அழிக்கப்படும். இதனால் குருத்துப்பூச்சியின் இனப்பெருக்கம் முற்றிலும் தடைபட்டு குருத்துப்பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்.மேலும் விபரங்களுக்கு கடையம் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுக வேண்டுமென கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us