ADDED : ஜூலை 31, 2011 03:07 AM
திண்டிவனம் : திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் வசிப்பவர்கள் தேவன், அல்லிமுத்து.
இவர்கள் இருவரும் 29ம் தேதி இரவு 10.30 மணிக்கு, மயிலம் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்று பணியில் இருந்த கேஷியர் ராமையாவிடம் 100 ரூபாய் கேட்டனர். அவர் தர மறுத்தார். இதனால் டேபிள் மேலிருந்த உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓட முயன்றனர். தடுத்த கேஷியரை திட்டி மிரட்டினர். திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிந்து தேவன், அல்லிமுத்துவை கைது செய்தார்.