Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கட்சி வேட்பாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் கிராம மக்கள்

கட்சி வேட்பாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் கிராம மக்கள்

கட்சி வேட்பாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் கிராம மக்கள்

கட்சி வேட்பாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் கிராம மக்கள்

ADDED : அக் 06, 2011 10:08 PM


Google News

திருவண்ணாமலை : செங்கம் அருகே, ஓட்டு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்களிடம், 10 ஆயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூல் செய்து, கிராம மக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, ஊர் எல்லையில் நுழையும் போது ஆரத்தி எடுத்து வரவேற்பது, மாலை அல்லது சால்வை அணிவித்து உற்சாகப்படுத்துவது வழக்கம். அப்போது, வேட்பாளர் சார்பில் பணம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஆரத்தி தட்டில் பணம் வைக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, சி.சொர்ப்பணந்தல் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயசந்திரன், சந்திரா, பன்னீர்செல்வம், பாண்டியன், சம்பந்தம், நடராஜன், ஆனந்தன், சிவானந்தம், சுப்பிரமணி ஆகிய ஒன்பது பேர் போட்டியிடுகின்றனர்.

இது தவிர, ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு, பலர் போட்டியிடுகின்றனர். ஓட்டு கேட்க சி.சொர்ப்பணந்தல் ஊருக்குள் வரும் வேட்பாளர்களிடம், நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை வசூலித்த பின்னரே, கிராம மக்கள், ஓட்டு சேகரிக்க அனுமதிக்கின்றனர்.

ஊராட்சி தலைவர் வேட்பாளர்களிடம், 10 ஆயிரமும், ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம், 5,000 ரூபாயும் நிர்ணயம் செய்து வசூலித்து வருகின்றனர். இது குறித்து, போலீசாரிடம் கேட்ட போது, 'இதுவரை இது தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us