ADDED : ஆக 30, 2011 05:32 PM
ஆத்தூர்:ஓடையில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால், இவர் தி.மு.க.,முன்னாள் ஒன்றிய செயலாளர். இவர் மனைவி ஜெயக்கொடி தி.மு.க., கவுன்சிலராக உள்ளார்.ஜெயபாலுக்கு சொந்தமான டிராக்டர் ஓடையில் மணல் கடத்தியதாக வந்த புகாரை அடுத்து விசாரித்த ஆர்.டி.ஓ.,செல்வராஜ், ஆர்.ஐ., அன்புசெழியன் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் சென்று டிராக்டரை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


