குடிபோதையில் ரகளை; போலீஸ் ஏட்டு கைது
குடிபோதையில் ரகளை; போலீஸ் ஏட்டு கைது
குடிபோதையில் ரகளை; போலீஸ் ஏட்டு கைது
ADDED : ஜூலை 27, 2011 06:17 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் அழகு, இந்திய கம்யூ., கட்சி பிரமுகர்.
இவருக்கும், இங்கு சிலோன் காலனி போலீஸ் ஏட்டு சக்திவேலிற்கும்(40) ஒரு பிரச்னையில் முன்விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் அழகு வீட்டிற்கு சக்திவேல் சென்றார். அங்கு அழகு இல்லாததால் அவரது மனைவி கிருபாராணியிடம்(31) அவதூறாக பேசி, அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கிருபாராணி ஒட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். ஏட்டு சக்திவேலை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தூத்துக்குடி ஆயுதப்படை ஏட்டான இவர், தற்போது பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணிபுரிகிறார்.