ADDED : ஆக 23, 2011 11:51 PM
செஞ்சி : அகலூர் கிராமத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் சங்க தலைவர் ஜோலாதாஸ் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சந்திரநாதன், ஆசிரியர் யசோதரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், வளர்ச்சி அதிகாரி குண சங்கர் கருத்துரை வழங்கினர்.ஏரி நீர் பாசன சங்க தலை வர் அப்பாண்டைராஜன், இந்திரா மகளிர் நற்பணி சங்க தலைவி
சந்திரா, விஜயகுமாரி, ஊராட்சி துணை தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினர். விஜயா நன்றி கூறினார்.
இதில், பல்வேறு போட் டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.