/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பொது வழியை ஆக்கிரமித்து வீடு நடவடிக்கை கோரி மக்கள் மனுபொது வழியை ஆக்கிரமித்து வீடு நடவடிக்கை கோரி மக்கள் மனு
பொது வழியை ஆக்கிரமித்து வீடு நடவடிக்கை கோரி மக்கள் மனு
பொது வழியை ஆக்கிரமித்து வீடு நடவடிக்கை கோரி மக்கள் மனு
பொது வழியை ஆக்கிரமித்து வீடு நடவடிக்கை கோரி மக்கள் மனு
ADDED : ஜூலை 17, 2011 01:32 AM
விழுப்புரம் : பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வளவனூர் பகுதி மக்கள் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு திரண்டதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.வளவனூரை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை(45).
இவருக்கு அதே பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தின் அருகே ஊருக்கு பொது பாதை புறம்போக்கு இடமும் உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு அங்கு வீடு கட்டும் பணியை துவங்கிய செல்லப் பிள்ளை புறம்போக்கு வழியை அடைத்து வீடு கட்டுகிறார்.இதை பற்றி அப்பகுதி மக்கள் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் மிரட் டினார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மாலை 5.15 மணிக்கு கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அவரது இல்லம் முன்பு திரண்டனர்.பின்னர் மாலை 5.30 மணிக்கு காரில் வந்த கலெக்டர் மணிமேகலையிடம் புகார் மனு கொடுத்தனர். மனு மீது நாளை (18ம் தேதி) விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதால் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.